Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகாரமில்லாமல், முக்கியத்துவமில்லாமல் ஆக்கப்படுகிறார்கள்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

மே 29, 2020 10:29

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை விமர்சித்துள்ள பாகிஸ்தான் அரசு, இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறு அதிகாரமற்றவர்களாக, முக்கியத்துவம் அற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது என விமர்சித்துள்ளது.

இதற்கு இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு, சிறுபான்மையினரை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப்பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியுள்ளது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்து வந்தன.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்பணிகள் கடந்த இருமாதங்களாக நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த 26-ம் தேதி முதல் மீண்டும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன

அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது.

அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்த உலகம் இதுவரை சந்தித்திரா, எப்போதுமில்லாத கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராடி வருகிறது. ஆனால், ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டாகச் சேர்ந்து இந்துத்துவா கொள்கையை முன்னெடுக்கின்றன

அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதி இருந்த இடத்தி்ல் ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 26-ம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த செயலை பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் மக்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கோயில் கட்டப்படுகிறது என்றாலும், நீதியை நிலைநிறுத்தும் விஷயத்தில் அந்த தீர்ப்பு தோல்வி அடைந்துவிட்டது.

பாபர் மசூதி வழக்கு, குடியுரிமை திருத்தச்சட்டம்(சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு(எந்ஆர்சி)போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறு அதிகாரமில்லாமல், முக்கியத்துவமில்லமல் ஆக்கப்படுகிறார்கள் என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகள்” எனத் தெரிவித்துள்ளது

பாகிஸ்தான் அரசின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிதித்து பதிலடி தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாத சூழலில் அதுகுறித்து முறையற்ற வகையில் பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. சிறுபான்மை மக்களை நடத்தும் விவகாரத்தில் பாகிஸ்தான் வெட்கித் தலைகுணிய வேண்டிய நிலையில்இருக்கிறது.

நீதித்துறையைப் பொறுத்தவரை பாகிஸ்தான் நன்றியுணர்வுடன் நடக்கவில்லை என்பதைக் கண்டிப்பாக உணர வேண்டும். நம்பகத்தன்மை, நேர்மை ஆகியவற்றை பாகிஸ்தானிடம்இருந்து கண்டுபிடிப்பது கடினம்.
ஆனால் இந்தியாவில் சட்டத்தி்ன் ஆட்சி நடக்கிறது.

சட்டத்துக்குமுழுமையாக மதிப்பளிக்கும் நாடு. அனைத்து தரப்பு நம்பிக்கைகள் மீதும் சமமான உரிமைஅளிக்கும் நாடு. பாகிஸ்தான் அரசு தங்களுடையஅரசியலமைப்புச்சட்டத்தை மீண்டும் ஒருமுறை நன்கு படித்து வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்

தலைப்புச்செய்திகள்