Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு ஏற்படும்: மத்திய அரசு எச்சரிக்கை

மே 30, 2020 07:15

புதுடெல்லி: இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளால் விமானப் போக்குரவத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட மாவட்டங்களில், அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: விமானங்கள் இறங்கும் போதும், புறப்படும் போதும், தாழ்வாக பறக்கும் தன்மை கொண்ட வெட்டுக்கிளிகளால் பாதிப்பு ஏற்படும். விமான இஞ்சின், ஏசி கட்டுப்பாட்டு அறைக்குள்ளும் அவைகள் செல்ல வாய்ப்பு உள்ளது. விமானம் செல்லும் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் செல்லும் போது, சென்சார் பிரச்னை ஏற்படும். இதனால் விமானிக்கு வேகம், உயரம் சார்ந்த தகவல்கள், தவறாகலாம்.

விமானத்தில் குறுக்கிடும் வெட்டுக்கிளிகளை வைப்பர் பயன்படுத்தி அப்புறப்படுத்தினாலும், விமானியின் கவனத்தை திசை திருப்பும் திறனுள்ளவை. அவை இரவில் பறக்காது என்பது நமக்கு ஆறுதல். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்