Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாக் எல்லையில் சீன படைகள் முன்னேறுவதை தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம்

மே 30, 2020 07:28

புதுடில்லி : லடாக் எல்லைக்குள் முன்னேற முயன்ற சீன ராணுவத்தினரை, இந்திய ராணுவ வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா - சீனா எல்லையில், லடாக்கில், இந்திய ராணுவம், கடந்த மூன்றாண்டுகளாக சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில், கால்வன் நலா பகுதியில், சீனா, தன் படையை குவிக்கத் துவங்கியதால், பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் உள்ள, கால்வன் நலா பகுதிக்கு முன்னேறி, இந்திய ராணுவத்தின், 14வது ரோந்து முனையத்திற்கு மிக நெருக்கமாக, படைகளை நிறுத்த வேண்டும் என்பதே அதன் திட்டம். இந்த முனையத்திற்கு அருகில் தான், இந்திய ராணுவம், பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பகுதியில் படைகளை நிறுத்தி, கட்டுமான பணிகளை தடுக்க வேண்டும் என்பதே, சீன ராணுவத்தின் நோக்கம்.

இதை புரிந்து கொண்ட இந்திய ராணுவம், மின்னல் வேகத்தில் செயல்பட்டு, கால்வன் நலா பகுதியில் படைகளை குவித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சீன ராணுவத்தினர், மேற்கொண்டு முன்னேறும் திட்டத்தை கைவிட்டனர். தற்போது, இந்திய ராணுவத்தின், 'கே.எம்., 120' முகாமில் இருந்து, 17 கி.மீ., துாரத்தில் சீன ராணுவம் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்