Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.82 லட்சத்தை தாண்டியது

மே 31, 2020 07:50

புதுடெல்லி: இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.82 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 31) காலை 10:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,763 ல் இருந்து 1,82,143 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,971 ல் இருந்து 5,164 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,370 ல் இருந்து 86,984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 89,995 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 193 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 65,168 - 2,197
தமிழகம் - 21,184 - 160
டில்லி - 18,549 - 416
குஜராத் - 16,343 - 1,007
ராஜஸ்தான் - 8,617 - 193
மத்திய பிரதேசம் - 7,891 - 343
உத்தர பிரதேசம் - 7,445 - 201
மேற்கு வங்கம்- 5,130 - 309
ஆந்திரா - 3,569 - 60
கர்நாடகா- 2,922 - 48
தெலுங்கானா - 2,499 - 77
கேரளா - 1,208 - 9

புதுச்சேரி- 51 - 0

தலைப்புச்செய்திகள்