Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதில் இந்தியாவுக்கு மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!

ஜுன் 03, 2020 06:08

புதுடெல்லி: ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் ஜி7 நாடுகள் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இவை வர்த்தகம், பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடத்தும்.

இந்தாண்டு இந்த மாநாட்டை அமெரிக்கா தலைமையேற்று நடத்துகிறது. இந்நிலையில் ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியாவை அழைக்க டிரம்ப் முடிவு செய்திருந்தார். அதன்படி அவர் நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் பேசி ஜி7 மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் டிரம்பின் அழைப்பை ஏற்று வரும் செப்டம்பரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஜி7 மாநாட்டை அமெரிக்கா தலைமையேற்று நடத்துவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது, அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார். உறுப்பு நாடுகளாக உள்ள 7 நாடுகளுடன் இந்தியா உள்பட சில நாடுகள் கலந்து கொள்ள விருப்பப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதனடிப்படையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அமெரிக்கா மற்ற நாடுகள் நடத்தும் ஜி7 மாநாடு வெற்றியடைய இந்தியாவும் இணைந்து பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அப்போது டிரம்பின் தொலைநோக்கு அணுகுமுறையை மோடி பாராட்டினார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டிரம்பின் அழைப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் ரஷ்யாவோ சீனாவை தனிமைப்படுத்தும் திட்டத்திற்கு ஏற்க மறுத்து அழைப்பை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்