Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் கொரோனா தீவிர பரவல்: ஒரே நாளில் 1,513 பேருக்கு தொற்று

ஜுன் 04, 2020 06:37

புதுடெல்லி: டெல்லியில் புதிதாக 1,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,645 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 606 ஆகி உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 13,497 பேர் சிகிச்சையில் .உள்ளனர். இன்று மட்டும் 299 பேர் குணமடைந்ததை முன்னிட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9, 542 ஆக உள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்