Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யானை கொல்லப்பட்ட சம்பவம்; தொகுதி எம்.பி. ராகுல் ஏன் வாய்திறக்காமல் உள்ளார்: மேனகா ஆவேசம்

ஜுன் 04, 2020 09:22

புதுடெல்லி: கேரளாவில் யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் வயநாடு தொகுதி காங்., எம்.பி. ராகுல் இன்னும் வாய்திறக்காமல் உள்ளார் என பா.ஜ. வைச் சேர்ந்த மேனகா குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் , பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் உள்ள, வெள்ளியார் ஆற்றில் கர்ப்பிணி யானை அன்னாச்சி பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து பா.ஜ. வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை அமைப்பினைச் சேர்ந்தவருமான மேனகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேனகா அளித்த பேட்டியில், யானை கொல்லப்பட்டததற்கு பொறுப்பேற்று கேரள வனத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். வன அலுவலர்கள் அனைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் நடந்த மலப்புரம் வயநாடு லோக்சபா தொகுதிக்குள் உள்ளது. அந்த தொகுதி காங். எம்.பி.யாக இருப்பவர் இது தொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார். மத்திய அரசை குறை கூறுவதில் கவனம் செலுத்தும் அவர் (ராகுல் ) தனது சொந்த தொகுதியில் நடந்துள்ள பிரச்னையை எப்படி தீர்ப்பார் என்றார் ஆவேசமாக.

தலைப்புச்செய்திகள்