Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமரால் பாராட்டப்பட்ட மோகன் மகள் ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வு

ஜுன் 05, 2020 06:27

மதுரை: பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வாகியுள்ளார்.

மதுரையில் மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் (47) ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை நிவாரணமக வழங்கினார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தை செலவிட்டுள்ளார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இக்கட்டான நிலையில் மோகன் உதவிய சம்பவம் அறிந்த பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் மகள் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக வழங்கியதை பாராட்டி, ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதி சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக நேத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக இவர் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்