Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27,256 ஆக உயர்வு: 220 பேர் பலி

ஜுன் 05, 2020 06:50


சென்னை: தமிழகத்தில் நேற்று 1,384 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு 27,256 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 5வது நாளாக தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : தமிழகத்தில், 1,384 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் குவைத்தில் இருந்தும், 5 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், 4 பேர் தெலுங்கானாவில் இருந்தும், கேரளாவில் இருந்து ஒருவரும் வந்தவர்கள். மற்ற 1,373 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 16, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. தற்போது வரை , 5,44,981 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதேபோல், நேற்று வரை 15,991 பேருக்கும், மொத்தம் 5,20,286 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானவர்களில் 783 பேர் ஆண்கள், 601 பேர் பெண்கள். தற்போது வரை 16,964 ஆண்களும், 10,278 பெண்களும், த மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14901 ஆகவும், நேற்று மேலும் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 220 ஆகவும் அதிகரித்துள்ளது.

0-12 வயதுடையவர்களில் 1 506 பேரும், 13- 60 வயதுடையவர்களில் 23,084 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,712 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்