Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை ராயபுரம் மண்டலத்தில் 3,552 பேருக்கு கொரோனா தொற்று

ஜுன் 06, 2020 06:29

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் ராயபுரம் மண்டலத்தில் 3,552 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குறைவாக ஆலந்தூர் மண்டலத்தில் 314 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. நேற்றும்(ஜூன் 5) 1,116 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19, 826 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று உயிரிழந்த 12 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால். சென்னையில் மட்டும் இதுவரை 178 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி பகுதியில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,552 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தண்டையார்ப்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில், முறையே 2470, 2,245,2,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 314 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் 23 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து காப்பக வளாகத்தை தூய்மை செய்யும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. சிறுவர்களுக்கு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளி்கப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்