Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்; தென் மேற்கு பருவ மழை தீவிரமாக வாய்ப்பு

ஜுன் 06, 2020 06:43

சென்னை : வங்க கடலில் ஜூன் 8ல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இது புயலாக வலுவடைந்தால் தென் மேற்கு பருவமழை தீவிரமடையும்' என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை துறை தலைமை இயக்குனர் மொகோபாத்ரா கூறியதாவது:மத்திய மேற்கு வங்கக் கடலின் கிழக்கு பகுதியில் ஜூன் 8ல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது புயலாக வலுவடைந்து ஒடிசா நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. இதனால் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் தீவிரமடையும். இவ்வாறு கூறினார்.சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்