Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீஹார் தேர்தல் பிரசாரம்: இன்று துவக்குகிறார் அமித் ஷா

ஜுன் 07, 2020 06:30

பாட்னா : பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 7) துவக்குகிறார்.

பீஹாரில், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று துவக்கி வைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக, பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பீஹார் மக்களுடன், 'ஆன்லைன்' வழியாக அமித் ஷா இன்று பேசுகிறார்.

இதற்காக, மாநில முழுவதும் உள்ள, 72 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில், அமித் ஷாவின் பேச்சை கேட்க, பா.ஜ., சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்