Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளரை அனுமதிக்கக்கூடாது: வணிக நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

ஜுன் 07, 2020 06:44

சென்னை: மாஸ்க் அணியாமல் வாடிக்கையாளர்களை, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 30 வரை, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, வணிக நிறுவனங்கள், கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாஸ்க் இல்லை என்றால் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது
*கடைக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும்

* கடை உரிமையாளர்கள், ஊழியர்கள்கள் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உணவகங்கள்

இதனிடையே, உணவகங்களில் நாளை முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டுள்ளது.

அதன்படி,
* உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

* உணவகங்களில் நுழைவதற்கு முன் கைகளை கழுவ சோப்பு, சானிடைசர் வைக்க வேண்டும்

*ஏசி பயன்படுத்த கூடாது, ஜன்னல்கள் திறந்து காற்றோட்டமாக இருக்க வேண்டும்

*சாப்பிடும் டேபிளுக்கு இடையில் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்