Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்கத்தில், ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கும் பா.ஜ.,

ஜுன் 07, 2020 07:04

புதுடெல்லி: கோல்கட்டா: அடுத்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதங்களில், மேற்கு வங்கம், அசாம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில், மேற்கு வங்கத்தில், இம்முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில், பா.ஜ., உள்ளது.

கடந்த லோக் சபா தேர்தலில், 42 தொகுதிகளில், 18ல் பா.ஜ., வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அதற்கான காய்களை, பா.ஜ., இப்போதே நகர்த்த துவங்கியுள்ளது.

பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான ஜன சங்கத்தின் நிறுவனர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், கோல்கட்டா துறைமுகத்துக்கு, ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என, பெயர் மாற்றம் செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்