Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா எதிரொலி; சொகுசு விடுதிகளில் அடைத்து வைப்பு

ஜுன் 07, 2020 07:07

ஆமதாபாத் : குஜராத்தில், வரும் 19ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்., கட்சியின் மூன்று எம்.எல்.ஏ.,க்கள், அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் கலக்கமடைந்த கட்சி மேலிடம், மீதமுள்ள எம்.எல்.ஏ., க்களை, சொகுசுவிடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் எதிர்க்கட்சியான, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர், கடந்த மார்ச்சில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.அடுத்ததாக, இந்த மாதம், 3ல், அக்ஷய் படேல், ஜிது சவுத்ரியும், நேற்று முன்தினம் பிரிஜேஷ் மெர்ஜாவும் தங்கள்,எம்.எல்.ஏ.,பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, ராஜினாமா செய்த காங்., - எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, எட்டாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இம்மாநிலத்தில், ராஜ்யசபா தேர்தல், வரும், 19ல் நடைபெற உள்ளது. இதில் இரண்டு எம்.பி.,க்களைப் பெற, காங்., கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மீதமுள்ள, 65 எம்.எல்.ஏ.,க்களையும், 'ரிசார்ட்' மற்றும் சொகுசு பங்களாக்களில் தங்க வைக்க, கட்சியின் மேலிடம் முடிவு செய்தது.

இதுகுறித்து, மாநில காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறியதாவது:காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க, கட்சியின் மேலிடம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து, அவர்கள் ரிசார்ட்டிலும், தனியார் பங்களாக்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் ஜூன், 19 வரை, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், இங்கேயே தங்கியிருப்பார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்