Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2.56 லட்சமாக உயர்வு; 7,135 பேர் பலி

ஜுன் 08, 2020 06:33

புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,135 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 094 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 135ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு

மஹாராஷ்டிரா - 85,975 3,060

தமிழகம் - 31,667 -269

டில்லி - 27,654-761

குஜராத் - 20,070 -1,249

ராஜஸ்தான் - 10,599 - 240

உத்தர பிரதேசம் - 10,536 - 275

மத்திய பிரதேசம் - 9,401 - 412

மேற்கு வங்கம் - 8,187-396

கர்நாடகா- 5,452 - 61

பீஹார் - 5,088 -30

ஆந்திரா - 4,708 - 75

ஹரியானா - 4,448 - 28

காஷ்மீர் - 4,087 -41

தெலுங்கானா - 3,580 - 123

ஒடிசா- 2,856-09

பஞ்சாப்- 2,608-51

அசாம் - 2,565-04

கேரளா - 1,914 - 15

உத்தரகாண்ட் - 1,355-13

ஜார்க்கண்ட்-1,099 -07

சத்தீஸ்கர்1,073 -04

திரிபுரா-800-0

ஹிமாச்சல பிரதேசம் -413 - 05

சண்டிகர் -314-05

கோவா-300-0

மணிப்பூர்-172-0

நாகலாந்து-118-0

லடாக்-103-01

புதுச்சேரி- 99 - 0

அருணாச்சல பிரதேசம்-51-0

மேகாலயா-36-1

மிசோரம்-34-0

அந்தமான-33-0

தாதர் மற்றும்நாகர் ஹவேலி-20-0

சிக்கிம்-07-0

தலைப்புச்செய்திகள்