Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கை மீறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்க அனுமதித்த, ரிசார்ட் மீது வழக்கு

ஜுன் 08, 2020 07:22

ஆமதாபாத்: குஜராத்தைச் சேர்ந்த, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள, 'ரிசார்ட்' எனப்படும் சொகுசு விடுதிகள் மீது, ஊரடங்கு உத்தரவை மீறியதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சொகுசு விடுதிகுஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, நான்கு ராஜ்யசபா எம்.பி., இடங்களுக்கு, வரும், 19ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில், பா.ஜ., சார்பில், அபய் பரத்வாஜ், ரமிலாபென் பாரா, நரஹரி அமின் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்., சார்பில், பாரத்சிங் சோலங்கி, சக்திசிங் கோஹில் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த, மார்ச், 26ல் இந்தத் தேர்தல் நடக்கவிருந்தது. ஆனால், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, காங்கைச் சேர்ந்த, ஐந்து, எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு தாவினர். கடந்த சில நாட்களில், மேலும் மூன்று, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். அதனால், 182 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள சட்டசபையில், காங்.,கின் பலம், 65ஆக குறைந்துள்ளது. இதனால், அக்கட்சியின் இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

அதையடுத்து, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ராஜ்கோட், அம்பாஜி, ஆனந்த் ஆகிய இடங்களில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டல்கள், ரிசார்ட்கள் உள்ளிட்டவற்றை, இன்று முதல் திறப்பதற்குதான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, எம்.எல்.ஏ.,க்களை தங்க வைத்ததாக, இந்த சொகுசு விடுதிகள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்