Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று?

ஜுன் 08, 2020 11:15

புதுடில்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அவர் உடல் நலத்தில் முழுக்கவனம் எடுத்துக் கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உலக பட்டியலில் 6வது இடத்திற்கு நெருங்கி உள்ளது. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 206 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 135ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, என மெட்ரோ நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. டெல்லியில் மொத்தம் 27 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது வரை 750 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல், இருமல் ஏற்பட்டு நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தாமே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார்.

நாளை (9 ம் தேதி ) அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவிற்கு பின்னரே அவரது நிலை குறித்த உண்மை நிலவரம் வெளியே தெரியவரும். கெஜ்ரிவாலை பொறுத்தவரை அவருக்கு அடிக்கடி இருமல் தொந்தரவு ஏற்கனவே இருந்து வருகிறது. இதனால் மருத்துவர்கள் , கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்