Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.66 லட்சமாக உயர்வு; 7,466 பேர் பலி

ஜுன் 09, 2020 07:20

புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.66 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,466 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 215 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 88,528 - 3,169
தமிழகம் - 33,229 - 286
டில்லி - 29,943 - 874
குஜராத் - 20,545 - 1,280
உத்தர பிரதேசம் - 10,947 - 283
ராஜஸ்தான் - 10,763 - 246
மத்திய பிரதேசம் - 9,638 - 414
மேற்கு வங்கம் - 8,613 - 405
கர்நாடகா- 5,760 - 64
பீஹார் - 5,202 - 31
ஹரியானா - 4,854 - 39
ஆந்திரா - 4,851 - 75
காஷ்மீர் - 4,285 - 45
தெலுங்கானா - 3,650 - 137
ஒடிசா- 2,994 - 9
அசாம் - 2,776 - 4
பஞ்சாப் - 2,663 - 53
கேரளா - 2,005 - 16
உத்தரகாண்ட் - 1,411 - 13
ஜார்க்கண்ட் - 1,256 - 7
சத்தீஸ்கர் - 1,160 - 4
திரிபுரா - 838 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 421 - 5
கோவா - 330 - 0
சண்டிகர் - 317 - 5
மணிப்பூர் - 272 - 0
புதுச்சேரி - 127 - 0
நாகலாந்து - 123 - 0
லடாக் - 103 - 1
அருணாச்சல பிரதேசம் - 51 - 0
மிசோரம் - 42 - 0
மேகாலயா-36-1
அந்தமான் - 33 - 0
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 22 - 0
சிக்கிம் - 7 - 0

தலைப்புச்செய்திகள்