Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 316 கொரோனா கட்டுப்பாடு பகுதிகள்: அரசு அறிவிப்பு

ஜுன் 10, 2020 07:29

சென்னை : தமிழகத்தில் 21 மாவட்டங்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று உள்ள 16 மாவட்டங்களில் 316 பகுதிகள் மட்டுமே கட்டுப்பாடு உள்ளவையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 229 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 27 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்தப்பட்ட வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் உள்ளிட்ட 16 மாவட்டங்கள் கொரோனா பரவும் அபாயகரமான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் 201; திருவண்ணாமலை 29; கடலுார் 26; காஞ்சிபுரம் 13 பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்கள் கொரோனாவாவை கட்டுப்படுத்திய நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தொற்று இருப்பதால் அவை மாவட்ட கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன.

தற்போது வரை 21 மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பாதிப்பு உள்ளது.அந்த பகுதிகளில் இருந்து தொற்று வெளியே பரவுவதை தடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவையான மருத்துவ பணியாளர்கள் வசதிகள் சுகாதாரத் துறை செய்து தரவும் தயாராகஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்