Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு 2வது சனி விடுமுறை

ஜுன் 11, 2020 06:16

சென்னை : அரசு அலுவலகங்களுக்கு, இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளித்து, கிருமி நாசினியால் சுத்தம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, சனிக்கிழமையும் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், இரண்டாவது சனிக்கிழமை, அரசு அலுவலகங்களுக்கு, விடுமுறை அளித்து, அன்றும் மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும், அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் வளாகம் முழுவதும், துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும்; கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதை பின்பற்றி, தமிழகத்திலும், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், மாதத்தின், இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிப்பதுடன், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்