Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா எக்ஸ்பிரஸ் என்று நான் சொல்லவில்லை: மம்தா பல்டி

ஜுன் 11, 2020 06:36

கோல்கத்தா : கொரோனா எக்ஸ்பிரஸ் என்ற வார்த்தையை நான் ஒருபோதும் உருவாக்கவில்லை. பொதுமக்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்றே கூறினேன் அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 415 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், மத்தியில் இரண்டாவது முறை ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை விளக்கும், 'வீடியோ கான்பரன்ஸ்' பேரணியை, மேற்கு வங்க மக்களுக்காக செவ்வாயன்று அமித்ஷா நடத்தினார். அதில் பேசிய அமித்ஷா சி.ஏ.ஏவை எதிர்த்ததற்காகவும், புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வந்த சிறப்பு ரயிலை கொரோனா எக்ஸ்பிரஸ் என முதல்வர் மம்தா கொச்சைப்படுத்தியதற்காகவும் கடுமையாக சாடினார்.

இதற்கு பதிலளித்துள்ள மம்தா, கொரோனா எக்ஸ்பிரஸ் என்ற வார்த்தையை நான் ஒருபோதும் உருவாக்கவில்லை. பொதுமக்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்றே கூறினேன். ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சிறப்பு ரயில்களை இயக்கியிருந்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் மூன்று மாதம் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.

காலையில் பரபரப்பான நேரத்தை குறைப்பதற்காக அரசு அலுவலகங்கள் ஷிப்ட் முறையில் இயங்கும். முதல் ஷிப்ட் 9.30 முதல் 2.30 மணி வரையும், இரண்டாவது ஷிப்ட் 12.30 முதல் 5.30 மணி வரையும் இருக்கும். தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்