Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது

மார்ச் 15, 2019 08:17

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - முஸ்லிம் லீக் - ஐ.ஜே.கே., ஆகிய, ஒன்பது கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளிலும், மதிமுகவுக்கு ஒரு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டும், ஐஜேகே, கொ.ம.தே.க., , முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன.  
கூட்டணி கட்சிகளுக்கு, ஒதுக்கீடு செய்தது போக, மீதமுள்ள, 20 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஸ்டாலின் அறிவித்துள்ளார் 


திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: 

திமுக: 
மத்திய சென்னை, தெற்கு சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை 

காங்கிரஸ் : 
திருவள்ளூர், கன்னியாகுமரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி, புதுச்சேரி 

மார்க்சிஸ்ட் கம்யூ.,: 
கோவை, மதுரை 

இந்திய கம்யூ.,: 
திருப்பூர், நாகப்பட்டினம் 

விடுதலை சிறுத்தைகள் : 
விழுப்புரம், சிதம்பரம் 

மதிமுக: ஈரோடு 
முஸ்லிம் லீக்: ராமநாதபுரம் 

கொ.ம.தே.க., : நாமக்கல் 
ஐஜேகே: பெரம்பலூர் 


17 ம் தேதி வேட்பாளர் பட்டியல் 
லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17 ம் தேதி வெளியிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாப் கனி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

தலைப்புச்செய்திகள்