Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம்: மக்கள் ஒத்துழைக்க முதல்வர் வேண்டுகோள்

ஜுன் 12, 2020 06:38

சென்னை: 'குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கிட, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, முதல்வர் விடுத்துள்ள செய்தி: உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான, விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 12, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இப்பூமியில் பிறக்கும், குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை இன்றியமையாதது.அந்த உரிமைகளை, அவர்களிடமிருந்து பறிப்பது, இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது.தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறையை, முற்றிலுமாக ஒழித்திட, எண்ணற்ற திட்டங்களை, அரசு சீரிய முறையில், செயல்படுத்தி வருகிறது.

'குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம்' என்பதை உணர்ந்து, குழந்தைகளின் உரிமைகளை மதித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கிட, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கும், திட்டங்களுக்கும், அனைத்து தரப்பினரும், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்