Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரபல வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் ஐக்கியம்

ஜுன் 12, 2020 09:20

சென்னை: பரபரப்புகளை தந்தே தெறிக்க விட்டுக் கொண்டிருந்த ஆர்சி பால்கனகராஜ் பா.ஜ.க.வில் இணைந்த சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவரான பால்கனகராஜுக்கு வழக்கறிஞர் அணி தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் பிரபல வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட்டு சங்கத் தலைவராக வெற்றி பெற்றவர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராகவும் வெற்றி பெற்றார் அதன்பிறகு
பார்கவுன்சில் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார்.

இவர் ஒரு அரசியல்வாதியும்கூட. தனியாக தமிழ் மாநில கட்சி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். தன்னுடைய தமிழ் மாநில கட்சியையும் பா.ஜ.க.வில் இணைத்துள்ளார். இந்த இணைப்பு விழா, சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி திரையரங்கத்தில் உள்ள ஒரு ஹாலில் நடந்தது..

கட்சியில் இணையும் பால் கனகராஜுக்கு வழக்கறிஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய பால்கனகராஜ் சுயநலத்துக்காக பா.ஜ.க.வில் இணையவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நிம்மதியான வாழ்வை வழங்கும்
ஆட்சியாக பா.ஜ.க.வின் ஆட்சி உள்ளதால், அதில் இணைந்துள்ளேன். சாமானியர்களுக்கான ஆட்சி நம் மோடியின் ஆட்சி என்று புகழாரம் சூட்டினார்.

தமிழக பா.ஜ.க.வை பொறுத்தவரை பால் கனகராஜின் வருகை மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்பட வேண்டியதாகும். கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதுபோல, ஜெ. மறைவுக்கு
பிறகும் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால், போட்டியிடாமல், தனது கட்சி, ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு அளிக்கும் என்றார். 

ஆனால் அதற்கு முன்பே இவர் தி.மு.க.வில் இருந்தவர். அக்கட்சியில் வழக்கறிஞர்கள்- போலீசார் மோதலின்போது, மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்தவர் ஆவார். தி.மு.க.வின் பல்வேறு வழக்கு விசாரணைகளை இவர் நன்கு அறிந்திருந்தவர். இப்போது இவரை தங்கள் பக்கம் பா.ஜ.க. இழுத்து கொண்டுள்ளது சிறந்த ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்