Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழிலாளர்கள் மீண்டும் சென்னை வர மறுப்பு: கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி

ஜுன் 13, 2020 06:56

சென்னை: 'கூடுதல் சம்பளம் கொடுத்தாலும், கொரோனா பீதி முடியும் வரை, சென்னைக்கு வரமாட்டோம்' என, வெளிமாநில தொழிலாளர்கள் தெரிவிப்பதால், கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஊரடங்கு காரணமாக, வெளி மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல அடம்பிடித்தனர்.

இதனால், கட்டுமான நிறுவனங்களும், தமிழக அரசும், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்தன. நான்கு மாவட்டங்கள் தவிர, மற்ற பகுதிகளில், ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால், முடங்கிய கட்டுமான பணிகளை, மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சொந்த ஊர்களுக்கு சென்ற கட்டுமான தொழிலாளர்களை, பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றன. முன்பு வழங்கியதை விட கூடுதல் சம்பளம் வழங்குவதாக, பல நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. மேலும், சில நிறுவனங்கள், சொந்த ஊரில் இருந்து, இங்கு வர சிறப்பு ஏற்பாடுகள் செய்வதாகவும் உறுதி அளித்தன.

இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:கொரோனா அச்சத்தால், சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுடன் பேசி வருகிறோம். அவர்களை மீண்டும் பணிக்கு அழைத்து வர தயாராக இருக்கிறோம்.பெரும்பாலான தொழிலாளர்கள், 'மீண்டும் சென்னைக்கு பணிக்கு வர மாட்டோம்' என்கின்றனர். ஆனால், பீஹார் மாநிலத்தை சேர்ந்த சில தொழிலாளர் குழுக்கள் மட்டும், திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளன.ஆனால், 'ஒரு சில மாதங்கள் போகட்டும்; கொரோனா பீதி அடங்கியதும் சென்னைக்கு வருகிறோம்' என்கின்றனர். அதே சமயத்தில், உள்ளூர் பணியாளர்களை கூடுதல் சம்பளம் கொடுத்து பயன்படுத்தவும், தயாராகி இருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்