Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாப் கனி போட்டியிடுவார் என தகவல்

மார்ச் 15, 2019 08:54

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - முஸ்லிம் லீக் - ஐ.ஜே.கே., ஆகிய, ஒன்பது கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளிலும், மதிமுகவுக்கு ஒரு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டும், ஐஜேகே, கொ.ம.தே.க., , முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன.   
கூட்டணி கட்சிகளுக்கு, ஒதுக்கீடு செய்தது போக, மீதமுள்ள, 20 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாப் கனி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்