Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது

ஜுன் 14, 2020 07:46

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது. குறைவாக மணலி மண்டலத்தில் 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி பகுதியில் மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி ராயபுரத்தில் 5,056 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 3,928 பேரும், தேனாம்பேட்டையில் 3,652 பேரும், கோடம்பாக்கத்தில் 3,267 பேரும், திருவிக நகரில் 2772 பேரும், அடையாறில் 1,725 பேரும், வளசரவாக்கத்தில் 1,338 பேரும், திருவொற்றியூரில் 1,113 பேரும், அம்பத்தூரில் 1,058 பேரும், மாதவரத்தில் 814 பேரும், ஆலந்தூரில் 593 பேரும், சோழிங்கநல்லூரில் 560 பேரும், பெருங்குடியில் 551 பேரும், மணலியில் 434 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஊரடங்கு விதிகளை மீறியதாக 5.87 லட்சம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4.69 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12.40 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே, கொரோனாவால் இன்று ஒரே நாளில் சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 8 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், கேம்சியில் 3 பேர் என 18 பேர் உயிரிழந்தனர்.

தலைப்புச்செய்திகள்