Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து; சுகாதாரத்துறை பரிந்துரை

ஜுன் 14, 2020 09:33

புதுடெல்லி: 'ரெம்டெசிவிர்' மருந்தை கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பயன்படுத்த, மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டோருக்கு, வைரஸ் தடுப்பு மருந்தான, 'ரெம்டெசிவிர்'ஐ வழங்க, மத்திய சுகாதாரத்துறை நேற்று பரிந்துரை செய்துள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும், 'டோசிலிசுமாப்' மருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் வழங்கப்பட்டு வந்த, மலேரியா தடுப்பு மருந்தான, 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்', ஆரம்ப கட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கமுடியாது என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்