Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறை தண்டனை: உத்தரகண்ட் அரசு அதிரடி

ஜுன் 15, 2020 07:34

டேராடூன் : பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால், 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரகண்ட் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. மாஸ்க், சமூக விலகலை கடைபிடிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

உத்தரகண்டில் நேற்று 31 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 1,816 ஆக உயர்ந்தது. 24 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 1,078 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், 705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரகண்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தணிக்கை செய்து, அதன் காரணங்களை ஆய்வு செய்யும் படி, அதிகாரிகளுக்கு முதல்வர் ராவத் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்