Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதித்தோருக்கு உயர் சிகிச்சை: திருச்சிக்கு 2 புதிய நவீன கருவிகள் வருகை

ஜுன் 15, 2020 10:26

திருச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உயா் சிகிச்சை வழங்கும் 2 புதிய நவீன கருவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பலா் குணமடைந்து வீடு திரும்புகின்றனா்.

இந்நிலையில் கொரோனாவால் கடும் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் சுவாசம், நாடித்துடிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்கும் விதமாக பல்வேறு நவீன கருவிகள் தயார் நிலையில் உள்ளன.

அதன்படி, மல்டி பாரா கண்காணிப்பு கருவி, வென்டிலேட்டா் கருவிகள் வரிசையில் அதிக ஆக்சிஜன் உட்செலுத்தும் 2 கருவிகள் ஏற்கெனவே இருப்புள்ளது. இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவா்கள், கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினா் கோரிக்கைக்கிணங்க காப்பீடு திட்டத்தில் மேலும் இரு கருவிகள் வாங்க அனுமதி கோரப்பட்டது.

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அவசர கால சிகிச்சையின்போது அதிக ஆக்சிஜனை மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு உட்செலுத்தும் ரூ, 3 லட்சம் மதிப்பிலான 2 கருவிகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றின் செயல்பாட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா ஆய்வு செய்து அறிமுகப்படுத்தினார்.

வென்டிலேட்டருக்கு பதிலாக சிறப்பாக செயல்படும் இக்கருவிக்கு அதிகத் தட்டுப்பாடு நிலவுகிறது. இச்சூழலில், திருச்சி மருத்துவமனையில் 4 கருவிகள் இருப்பாக கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்