Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 3 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை தலா 4 ஆயிரத்தை தாண்டியது

ஜுன் 16, 2020 06:23

சென்னை: சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் இதுவரை 33,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17,275 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 382 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 14,778 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 60.02 சதவீதம் ஆண்கள், 39.97 சதவீதத்தினர் பெண்கள், 0.01 சதவீதத்தினர் மூன்றாம் பாலினத்தனவர் ஆவர்.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,364 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4,426 பேரும், தேனாம்பேட்டையில் 4,031 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று இரவு 9 மணி முதல் தற்போது வரை சென்னையில் கொரோனாவுக்கு பாதித்து சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழந்தனர். அரசு மருததுவமனையில் 20 பேரும், தனியார் மருத்துவமனையிலும் 2 பேரும் உயிரிழந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும், ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 5 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் உயிரிழப்பு 501ஆக அதிகரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்