Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பல மாநிலங்களில் கொரோனா வார்டுகளாக பயன்படும் ரயில் பெட்டிகள்

ஜுன் 16, 2020 06:31

புதுடெல்லி: ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் அவற்றை பல மாநிலங்கள் பயன்படுத்த துவங்கி உள்ளன.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் கொரோனா சிகிச்சை தனிமை வார்டுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பல மாதங்களுக்கு முன்னாலேயே வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் தற்போது பயன்பாட்டிற்கு வரத் துவங்கி உள்ளன.

தற்போது டெல்லி அரசால் 54 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் உ.பி., யில் 70 ரயில் பெட்டிகளும், தெலுங்கானாவில் 60 ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டாக பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இந்நிலையில் 4 மாநிலங்களில் 204 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்தில் மேலும் ரயில் பெட்டிகளை வழங்க தயார் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. ஒரு ரயில் பெட்டியை கொரோனா வார்டாக மாற்ற ரூ 67,000 வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்