Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் நவம்பரில் கொரோனா பரவல் உச்சம்?: ஐ.சி.எம்.ஆர்., மறுப்பு

ஜுன் 16, 2020 06:55

புதுடெல்லி: 'கொரோனா' வைரஸ், நவம்பர் மாத மத்தியில், உச்சத்தை தொடும் என்ற தகவலை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மறுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், வரும் நவம்பர் மாத மத்தியில், வைரஸ் உச்சத்தை தொடும் என தகவல்கள் வெளியாகின. இது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த தகவலை, ஐ.சி.எம்.ஆர்., தற்போது மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம், 'டுவிட்டரில்' குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ், நவம்பர் மத்தியில் உச்சத்தை தொடும் என்று வெளியான தகவல்கள் தவறானவை. அந்த தகவல், ஐ.சி.எம்.ஆர்., ஆய்வில் தெரியவந்ததாக கூறுவதும் தவறு. அதுபோன்ற ஆய்வை, ஐ.சி.எம்.ஆர்., மேற்கொள்ளவில்லை. அது, ஐ.சி.எம்.ஆ.,ரின் அதிகாரப்பூர்வமான அறிக்கை இல்லை. இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்