Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனா சம்மன் அனுப்பவில்லை: இந்திய தூதர் விளக்கம்

ஜுன் 17, 2020 05:55

புதுடெல்லி: லடாக் மோதல் சம்பவம் தொடர்பாக இந்திய தூதரிடம், சீன வெளியுறவு துணை அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்; 43 சீன வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரியை அந்நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் லூவோ ஜவோஹி சந்தித்தார்.

இதுதொடர்பாக பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த மிஸ்ரி கூறுகையில், 'லடாக் எல்லையில் நிலவும் சூழல் தொடர்பாக, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. லடாக் மோதல் சம்பவத்துக்கு சீனா கண்டனம் தெரிவித்தது. வீரர்கள் உயிரிழப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவில்லை. இது வழக்கமான சந்திப்பாக இருந்தது. சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை' எனக் கூறினார்.

தலைப்புச்செய்திகள்