Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீன மோதல் சம்பவத்தால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ்

ஜுன் 17, 2020 06:01

புதுடெல்லி: லடாக் எல்லையில் நிலவும் கள நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என காங்., தெரிவித்துள்ளது.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீனா இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து இருப்பதாக இந்தியா உறுதி செய்தது.அதே போல் சீன தரப்பிலும் சுமார் 43 பேர் வரையில் படுகாயம் மற்றும் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா வெளியிட்ட டுவிட்டர் பதிவு: மோதல் சம்பவத்தால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி எல்லை பகுதியில் நிலவி வரும், கள நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்