Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இந்திய - சீன படைகள் வாபஸ்

ஜுன் 17, 2020 06:17

புதுடெல்லி: லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் இந்திய - சீன படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில், சீன வீரர்களுடன் நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்தியா - சீனா இடையே, எல்லை பதற்றத்தை தணிக்கும் விதமாக, இருதரப்பிலும் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இருநாட்டு ராணுவமும் லடாக் எல்லையில், கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அதே சமயம், பாங்காக் ஏரி, தவுலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இருதரப்பிலிருந்தும் வரவில்லை.

தலைப்புச்செய்திகள்