Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எனக்கு கொரோனா தொற்று இல்லை: திமுக நிர்வாகி வி.பி. கலைராஜன் விளக்கம்

ஜுன் 17, 2020 07:32

சென்னை: தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை மறுத்து திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை தகவல் வெளியானது.

இத்தகவலை மறுத்துள்ள விபி கலைராஜன், எனக்கு எந்தவித கொரோனா தொற்று அறிகுறியும் இல்லை; நலமாக வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

தலைப்புச்செய்திகள்