Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் இருந்து வந்த பெண் தனிமை: அறிவொளி நகரில் இரும்பு தடுப்புகள் அமைப்பு

ஜுன் 19, 2020 09:24

கரூர்: சென்னையில் இருந்து க.பரமத்தி வந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அறிவொளி நகரில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் க.பரமத்தி அன்னைநகரை சேர்ந்த ஒரு பெண்  சென்னையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து  கரூர் வழியாக க.பரமத்திக்கு அவர் வந்தார். இதனையடுத்து அருகேயிருந்து பொதுமக்கள் க.பரமத்தி போலீஸ் மற்றும் க.பரமத்தி வருவாய் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அந்த பெண்ணை எச்சரிக்கையாகவும் வீட்டில் உள்ள மற்ற நபர்களுடன் தொடர்பில் இல்லாமல் தனிமையில் இருக்குமாறு எச்சரித்தனர். பின்னர் வீட்டின் முன்புறம் அந்த தகவல் படிவத்தை ஒட்டி சென்றனர். க.பரமத்தி ஊராட்சி நிர்வாகம் சார்பில் அந்த வீட்டை சுற்றிலும் மற்றும் அந்த தெருவுக்கும் கிருமிநாசினி தெளித்தனர்.

ஊட்டியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க பெண் தனது தந்தை நினைவு தினத்திற்காக  கரூர் மாவட்டம் க.பரமத்தி அறிவொளி நகரில் வசிக்கும் தனது தம்பி வீட்டிற்கு கடந்த வாரம் வந்தார். நினைவு தினத்தில் திதி கொடுத்து விட்டு ஊட்டிக்கு சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தததில் அவருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது. அங்குள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்த பெண்  எங்கலாம் சென்றாார் என கேட்டு தெரிந்தனர். அதன்படி க.பரமத்தி அறிவொளி நகருக்கு அந்த பெண் வந்திருந்ததால் அந்த நகரை சுகாதாரத்துறையினர் இரும்பு தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தினர். அங்குள்ளவர்கள் வெளியே செல்லாமலும்  வெளியே உள்ளவர்கள் உள்ளே வராமலும் போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்