Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி கோரிக்கை: என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்

ஜுன் 19, 2020 09:38

புது டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இந்திய சீனா மோதல் காரணமாக 20 பேர் வீரமரணமடைந்ததால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு நேற்று 50 ஆவது பிறந்தநாள் ஆகும். ஆனால் கட்சியினர் யாரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறியதாவது: கொரோனாவால் நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் லடாக் எல்லையில் 20 பேர் வீரமரணமடைந்துள்ளனர். இதனால் கட்சியினர் யாரும் ராகுலின் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்.  இந்த கொண்டாட்டத்திற்கு பதில் லாக்டவுனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான  உதவியை அளிக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்ய வேண்டும். இந்த கடினமான காலங்களில் ஒரு வேளை உணவுக்கே பலர் கஷ்டப்படுவதால் சமூக சமையலறைகளை ஏற்படுத்த வேண்டும்.

தனது தாய் நாட்டுக்காக எல்லையில் வீரமரணம் அடைந்த 20 பேரின் ஆன்மா சாந்தி அடைய இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துங்கள். கேக் கட் செய்வது,  முழக்கமிடுவது, பேனர் வைப்பது ஆகியவற்றை அனைவரும் தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் ரத்த தான முகாம்களை நடத்த வேண்டும். இந்நிலையில் ராகுல் பிறந்தநாளையொட்டி 50 லட்சம் உணவு பொட்டலங்களை ஏழைகளுக்கு விநியோகிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதுபோல் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க்குகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்