Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கண்டாச்சிபுரத்தில் கடைகள் அடைப்பு

ஜுன் 22, 2020 01:03

திருக்கோவிலூர்: கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடை அடைப்பு நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கண்டாச்சிபுரத்தில் அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்தனர்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி கண்டாச்சிபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மொத்தம் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கண்டாச்சிபுரத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் முகையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சாம்ராஜ்  ஜானகி ஆகியோர் மேற்பார்வையில் ஊராட்சி செயலாளர் ஆனந்த் தலைமையில் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடை அடைப்பு நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கண்டாச்சிபுரத்தில் அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்தனர். இருப்பினும் மருந்தகங்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கின. இந்த கடையடைப்பு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கண்டாச்சிபுரம கடை வீதி மக்கள் நடமாட்டம் இன்றி  வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்