Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோகுலுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா

ஜனவரி 21, 2019 11:19

அம்பத்தூர்: சிகரம் குழுமத்தை சேர்ந்த மதுரவாயல் தென்றல் இதழின் ஆசிரியர் சின்னதுரை - சுதா தம்பதியின் மகன் கோகுலின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா ஜனவரி 20ம் தேதி கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு புதூரில் உள்ள அண்ணா ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.   

இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சிதம்பரம், முகப்பேர் கிழக்கு சந்தோஷ் பேன்சியை சேர்ந்த ராஜேஷ் உள்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தலைப்புச்செய்திகள்