Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவுக்கு எதிராக 2 போர்களில் இந்தியா ஈடுபட்டு வருகிறது: கெஜ்ரிவால்

ஜுன் 22, 2020 02:17

புதுடெல்லி: நம் நாடு சீனாவுக்கு எதிராக எல்லையிலும், கொரோனா வைரசிலும் என இரு போர்களில் ஈடுபட்டு வருவதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஒருபக்கம், சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி மக்களை படாத பாடுப்படுத்தி வருகிறது. மறுபக்கம், எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய வீரர்களிடம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கிடையே டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் 3வது இடத்தில் இருந்த டில்லி, தற்போது தமிழகத்தை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி மூலமாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட தொடக்க நாட்களில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொண்டோம். ஆனால், இன்று நாளொன்றுக்கு 18 ஆயிரம் பரிசோதனை என அதிகரித்துள்ளோம். பொதுமக்களுக்கு, பரிசோதனை செய்து கொள்வதில் எந்த பிரச்னையும் ஏற்படாது.

நமது நாடு சீனாவுக்கு எதிராக இரண்டு போர்களில் ஈடுபட்டு உள்ளது. ஒன்று எல்லை பகுதியில், மற்றொன்று சீனாவில் இருந்து வந்த வைரசுக்கு எதிராக. இந்த இரு போர்களிலும் தொடர்ந்து நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவற்றை அரசியலாக்க கூடாது. நம்முடைய தைரியம் மிகுந்த வீரர்கள் பின்வாங்க போவதில்லை. வெற்றி பெறும் வரை நாமும் ஓய்ந்து போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்