Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடக சங்கீதத்தை பாதுகாக்க வேண்டும்: காஞ்சி விஜயேந்திரர் வலியுறுத்தல்

ஜுன் 22, 2020 02:22

சென்னை: ''அனைத்து இசைக்கும் ஆதாரமாக விளங்கும் கர்நாடக சங்கீதத்தை பாதுகாக்க வேண்டும்,'' என காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது: உடல், புத்தி, மனம் நல்ல நிலையில் இருப்பதற்கு, தெய்வ வழிபாடும், நல்ல பழக்க வழக்கமும், கலைகளில் ஞானமும், ரசிகத்தன்மையும் அவசியம். அவ்விதத்தில் இயற்கையை ஒட்டிய இசை, இயற்கையாகவே மக்கள் மனதில் உதித்த ரசனை, தெய்வ பக்தியோடு சேர்ந்த விஞ்ஞான கண்ணோட்டத்தோடு அமைந்த இசையை முனிவர்கள், முன்னோர்கள், மன்னர்கள் வளர்த்திருக்கிறார்கள்.

நம் மக்கள் அந்த சங்கீதத்தை, வாய்பாட்டு, வாத்தியக் கருவிகள் மூலம் வளர்த்து வருகிறார்கள். கோவில்களில் நாதஸ்வரம் நுணுக்கமாக, சங்கீத விபரங்களோடு இறைவனுக்கு சமர்பிக்கப்படுகிறது. சங்கீதத்தின் மூலமாக அனைத்து உயிரினங்களும் அமைதி, ஆரோக்கியம், ஆனந்தம், ஆக்கப்பூர்வமான சூழலை பெறுகின்றன. இறைவன் ஆசி கிடைக்கிறது.

மனிதருடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது. உபாசனை மற்றும் மருத்துவ ரீதியில் சுற்றுப்புற சூழலை சரியாக அமைத்து தருதலுக்கு சங்கீதம் பயன்படுகிறது. மேல்நாட்டில் மக்கள் அவர்களது இசையை பழகி வருகிறார்கள். ஆனால் கர்நாடக சங்கீதம், அனைத்து சங்கீதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அந்த வேர்களை பாதுகாப்போம். இவ்வாறு கூறினார்.

தலைப்புச்செய்திகள்