Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போராடுவதற்கென்றே பிறந்தவர்கள் பீஹார் ரெஜிமென்ட் படை பிரிவினர்: ராணுவம் பாராட்டு

ஜுன் 23, 2020 04:54

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், சீன வீரர்களுடன் போராடிய பீஹார் ரெஜிமென்டிற்கு, நம் ராணுவம், பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வானில், 15ம் தேதி, சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில், நம் ராணுவ வீரர்கள், 20 பேர், வீர மரணம் அடைந்தனர்.இவர்களில் பெரும்பாலானோர், பீஹார் ரெஜிமென்டை சேர்ந்தவர்கள். இந்நிலையில், இந்திய ராணுவம், அந்த படைக்கு பாராட்டு தெரிவித்து, 'டுவிட்டரில், 'வீடியோ'வை பதிவிட்டுள்ளது.

அதில், ராணுவ மேஜர் அகில் பிரதாப், 'பீஹார் ரெஜிமென்ட் வீரர்கள், கார்கில் போரில், பாக்., ராணுவத்தினரை எதிர்த்து, வெற்றி கண்டவர்கள்.'இந்த வெற்றி, 21 ஆண்டுகளுக்கு முன், இதே மாதத்தில் நடந்தது. பீஹார் படை பிரிவினர், போராடுவதற்கென்றே பிறந்தவர்கள்' என, கூறியுள்ளார். பீஹார் ரெஜிமென்ட், 1941ல் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின், நம் ராணுவத்தின் யுத்த களங்களில், இப்படை பிரிவு முக்கிய பங்காற்றி வருகிறது.

தலைப்புச்செய்திகள்