Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்த முகேஷ் அம்பானி

ஜுன் 23, 2020 05:10


மும்பை: உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ள இவரது சொத்து மதிப்பு சுமார் 4 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆர்க்கிள் கார்ப்பரேஷன் தலைவர் லாரி எல்லிசன், பிரான்ஸ் நாட்டின் பிரான்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஒன்பதாவது இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் இந்திய பொருளாதாரம் பாதிப்பு அடைந்த போதும், ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டில், பேஸ் புக், ஜெனரல் அட்லாண்டிக், சவுதி, யுஏஇ போன்ற நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்தன. இதனால் ரிலையன்ஸில் பங்கு மூலதனம் அதிகரித்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனமானது இந்திய நிறுவனங்களில் 150 பில்லியன் டாலர்கள் என்ற சந்தை மதிப்பை தொட்ட முதல் நிறுவனம் என்ற பெயரினை பெற்றுள்ளது. தற்போது இந்திய மதிப்பில் அது 11 லட்சத்து 43 ஆயிரத்து 667 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்