Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாக் மோதலில் வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு கவர்னர் ரூ.20 லட்சம் உதவி

ஜுன் 24, 2020 06:56

சென்னை: லடாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு, தன் விருப்புரிமை நிதியிலிருந்து, தமிழக கவர்னர், 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

சீன ராணுவத்தினர் உடனான மோதலில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, ராணுவ வீரர் பழனி வீர மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு, இரங்கல் தெரிவித்த, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கவர்னர் விருப்புரிமை நிதியிலிருந்து, பழனி குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.

கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி, மேஜர் அஜய் ரத்தோர், நேற்று ராமநாநபுரம் மாவட்டத்தில் உள்ள, பழனி வீட்டிற்கு சென்றார். பழனியின் மனைவி வானதிதேவியிடம், 20 லட்சம் ரூபாய்க்கான, காசோலையை வழங்கினார்.

'வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு, தமிழக மக்கள் உதவ வேண்டும். இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்' என, கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்