Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலா ஆகஸ்ட் மாதம் வெளியில் வருவாரா?

ஜுன் 26, 2020 10:15

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருகிறார் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. 

அடுத்து, சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த பத்துக் கோடி ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டார்களா என்பது குறித்தும் இதுவரை தகவல் இல்லை.

வரும் நாள்களில் மேற்கண்ட பிராசஸ் எல்லாம் நடந்தாலும் இரு மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து பா.ஜ.க தரப்பிலிருந்து தகவல் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் இப்போது தமிழக அரசியல் களத்தின் ஹாட் டாபிக்காக உள்ளது. 

அந்தவகையில், பா.ஜ.க-வின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டரில் இதுகுறித்து வெளியிட்ட தகவல் அரசியல் காய்நகர்த்தலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அந்த ட்விட்டரில், ‘வெயிட் ஃபார் ஃபர்தர் அப்டேட்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார். 

சசிகலா வெளியில் வந்தால் அது அதிமுக தரப்பிற்கு பெரும் தலவலியாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். இருப்பினும்  இப்படி ஒரு பதிவை வெளியிட்டதன்மூலம்  எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து பா.ஜ.க-வின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடரும் என்றும் தெரிகிறது. 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சேலம், கோவை, திருச்சி மாவட்டங்களுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘முதல்வருக்கு மத அடிப்படைவாதிகள், தமிழ் தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாகவும், முதல்வரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று 11 மாவட்ட எஸ்.பி-க்களுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியிருப்பதாகவும்’ செய்திகள் வெளியாகி பரபரப்பானது. ஆனால், இந்தத் தகவல் உண்மை இல்லை என்று  இதனை உளவுத்துறை வட்டாரங்கள் மறுத்துள்ளவாம்.

தலைப்புச்செய்திகள்