Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி இறுதிச்சடங்கில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

ஜனவரி 21, 2019 01:11

பெங்களூரு: மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்மபூஷன்’ பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்பட்ட சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி வயோதிகம்சார்ந்த பிரச்சனைகளால் தனது 111-வது வயதில் இன்று காலமானார்.  

அவரது மரணம் தொடர்பான தகவல் வெளியானதும் சித்தகங்கா மடத்துக்கு சென்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல் மந்திரிகள் சதானந்தா கவுடா, எடியூரப்பா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கர்நாடக மாநிலத்துக்கு வந்திருந்தபோது துமக்கூருக்கு சென்று மடாதிபதி சிவகுமார சுவாமியை சந்தித்தது நினைவிருக்கலாம். 

நாளை மாலை 4.30 மணியளவில் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அவரது மறைவுக்கு கர்நாடக மாநில அரசின் சார்பில் மூன்றுநாள் துக்கம் அனுசரிக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என முதல் மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். 

இந்நிலையில், நாளை மாலை நடைபெறும்  ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பதாக தெரியவந்துள்ளது. 

இதை தொடர்ந்து, தும்கூருக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். அப்பகுதியில் பத்துக்கும் அதிகமான தற்காலிக ஹெலிப்பேடுகள் அமைக்கப்படுகின்றன. 
 

தலைப்புச்செய்திகள்