Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகை வனிதாவின் 3வது கணவர் மீது அவரது முதல் மனைவி போலீசில் புகார்

ஜுன் 28, 2020 08:58

சென்னை:  விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், பீட்டர் பால் என்பவரை  கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

வனிதா விஜயகுமார் கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007-ல் விவாகரத்து பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2வது திருமணம் செய்துகொண்ட அவர், ராஜன் ஆனந்துடனும் சில பிரச்னைகளால் விவகாரத்து பெற்றார். 

வனிதாவிற்கு முதல் திருமணத்தின் மூலம் விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். 2வது திருமணத்தின் மூலம் ஜெயந்திகா என்ற மகள் உள்ளனர். 

மேலும் அவர், தனது தந்தையான விஜயகுமார் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பீட்டர் பால் என்பவரை  கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஒருபுறம் திருமணம் நடக்க மறுபுறம், பீட்டர்பால் மீது வடபழனி காவல் நிலையத்தில், அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல், அவர் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். 

கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளதாகவும், முறையாக விவாகரத்து அளித்த பின்னரே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்